வாஸ்துப் படி ஜன்னல் வைக்க வேண்டிய இடம் எது தெரியுமா?

வாஸ்துப் படி ஜன்னல் வைக்க வேண்டிய இடம் எது தெரியுமா?

வாஸ்துப் படி ஜன்னல்கள் அனைத்தும் கதவுகள் தயாரிக்க பயன்படுத்திய மரத்தால் செய்வதே சிறந்த பலனை தரும். ஜன்னல்கள் எப்போதும் வெளிப்புறமாக திறக்கும் படியே அமைக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வைக்க கூடிய ஜன்னலின் எண்ணிக்கையை விட தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகமாக இருக்க வேண்டும். தெற்கு சுவரில் ஏதேனும் ஒரு ஜன்னலாவது கட்டாயம் இருக்க வேண்டும்.

வாஸ்துப் படி ஜன்னல் வைக்க வேண்டிய இடம்:-

ஜன்னல்கள் எப்போதும் இரட்டை படையில் அமைவதே நல்லது. தலைவாசலுக்கு இரு பக்கமும் ஜன்னலினை அமைப்பது நல்ல பலனை தரும். இப்படி செய்வதன் மூலம் பொருளாதார சிக்கல் குறையும். வீட்டில் நோய் வாய்ப்படுவது தவிர்க்கப்படுகிறது.

பெரிய வீடு கட்டினால் ஜன்னலின் அளவும் பெரிதாக இருக்கலாம். சிறிய அளவுள்ள வீடுகளில் சிறிய ஜன்னல்கள் அமைக்க வேண்டும். மாறாக சிறிய வீட்டில் பெரிய ஜன்னலை வைத்தால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய்கள் தாக்கி அவஸ்தைபடுவார்கள். ஜன்னல் வழியாக மனிதர்கள் செல்ல முடியாத நிலை இருப்பதால் கதவை விட ஜன்னலுக்கு சக்தி குறைவு என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

Share this story