ஃபோக்ஸ்வேகன் அமியோ அறிமுகம்

ஜெர்மனியை சேர்ந்த உலகின் முதன்மையான ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் அமியோவை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், ட்ரென்ட்லைன் கம்ஃபர்ட்லைன் மாடல், ஹைலைன் மாடல் என மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எஞ்ஜினை பொருத்த வகையில் 110 பிஎச்பியும், 230 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோவில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக உள்ளது, மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பத்துடன் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கார் மேக் இன் இந்தியா திட்டதின்படி முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. விரைவில் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோவின் முன்பதிவு தொடங்க உள்ளது. இந்த காரின் விலை இன்னும் வெளியாகவில்லை. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் விரைவில் சந்தைக்கு வர உள்ளது.