வோடபோன் 4ஜி இண்டர்நெட் சேவை சென்னையிலும்!

வோடபோன் 4ஜி இண்டர்நெட் சேவை சென்னையில் தொடக்கம்:-
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி-ன் வருகைக்கு பிறகு பல நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகிறது. வோடபோன் நிறுவனத்துக்கு முன்னதாகவே ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தமிழகத்தின் பல இடங்களிலும் 4ஜியை ஏற்கனவே சென்னை மட்டுமின்றி பல்வேறு நகரங்களிலும் அறிமுகப்படுத்தி விட்டது.
இதை தவிர மற்ற நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள் இண்டர்நெட் சேவையை மிக குறைந்த விலையில் வழங்குகிறது. ஏர்செல் 10 ஜிபி டேட்டாவை 227 ரூபாய்க்கு அழிக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் 1ஜிபி டேட்டாவை 36 ரூபாய்க்கு வழங்கி வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்கிறது.
4 ஜி நெட்வோர்க் வசதி மூலம் அதிக அளவிலான தரவுகளை சில நொடிகளில் சேமிக்கலாம். பிப்ரவரி 12 ஆம் தேதி சென்னையில் 4ஜியை வோடபோன் நிறுவனம் அறிமுகபடுத்தியது. மேலும் இதர நகரங்களில் மார்ச் மாதத்திற்குள் அறிமுகபடுத்தப்படும் என வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.