அசத்தலான அம்சங்களுடன் விவோ வை20ஐ ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வை20ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
நிறம்: மேலும் விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் டான் வைட் மற்றும் நெபுளா புளூ போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.
டிஸ்பிளே: விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன் கொண்டுள்ளது.
பிராசஸர்: விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
மெமரி: விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும், மேலும் 3 ஜிபி (வை20ஐ) / 4 ஜிபி (வை20) ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டதாகவும், மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.
இயங்குதளம்: விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5 இயங்குதளம் கொண்டுள்ளது.
கேமரா: விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 2 எம்பி டெப்த் சென்சார்,
2 எம்பி மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா, மேலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு: விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ போன்றவற்றினையும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.
பேட்டரி: விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.