அமெரிக்காவில் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு எடுத்துள்ள டிக்டாக் நிறுவனம்!!

பள்ளி மாணவர்கள், கல்லூரி செல்லும் இளைஞர்கள், இல்லத்தரசிகள் என அனைவரையும் கட்டிப் போட்ட செயலி என்ற பெருமை டிக்டாக்கினையே சாரும், பல ஆண்டுகளாக இருக்கும் ஃபேஸ்பேக் போன்ற செயலிகளையும் தாண்டி பல மில்லியன் கணக்கிலான பயனர்களை தன் வசம் கெட்டியாய் கொண்டிருந்த டிக் டாக்கினால் நிகழ்ந்த அசம்பாவிதங்களும் உண்டு.
அதாவது 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியானது சந்திக்காத சர்ச்சைகளே கிடையாது என்றும்கூட சொல்லலாம். அந்தவகையில் அவ்வப்போது இடைக்காலத் தடைகளும் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல பெற்றோர்கள் அதனைத் தடை செய்ய வலியுறுத்திய நிலையில் ஒருவழியாக இந்தியா சீனா எல்லைப் பிரச்சினையின்போது டிக் டாக்கிற்கும் முடிவு வந்தது.
இந்திய- சீனா எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் சீனப் பொருட்கள் புறக்கணிக்கப்பட்டன, அந்தவகையில் சீனாவின் 59 செயலிகள் ஒன்றான டிக் டாக் செயலியும் தடைசெய்யப்பட்டது.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பின்னர் ஆஸ்திரேலியாவிலும் தடை செய்யப்படுவதாக தகவல் வெளியானது, அதனைத் தொடர்ந்து தற்போது அமேரிக்காவிலும் டிக் டாக் தடைசெய்யப்படுவதற்கான ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்து இட்டுள்ளார்.
இதனால் டிக் டாக் நிறுவனத்திற்கு அதிக இழப்பீடு ஏற்படும் என்பதால் டிக் டாக் நிறுவனம் அமெரிக்காவில் டிக்டாக்கின் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.