மிகப் பெரிய சோலார் மின்னுற்பத்தி ஆலை

உலகின் மிகப் பெரிய சோலார் மின்னுற்பத்தி ஆலையை அதானி நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது
உலகின் மிகப் பெரிய சோலார் மின்னுற்பத்தி ஆலையை அதானி நிறுவனம் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைத்துள்ளது. ரூ.4,550 கோடி முதலீடு செய்து 648 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் வகையில் அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இந்த மிகப் பெரிய மின்னுற்பத்தி நிலையத்தினை அமைத்துள்ளது. மேலும் 648 மெகாவாட்டை ஒரே இடத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையமாக இந்த சூரிய மின்னுற்பத்தி நிலையம் செயல்படுகிறது. கடந்த 2012-ம் ஆண்டில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையில் சோலார் திட்டங்களின் மூலம் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூரிய மின்னுற்பத்தி நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்படும் 648 மெகாவாட் மின்சாரமும் கமுதியில் உள்ள துணை மின் நிலையத்தின் மூலம் தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த திட்டதினை பற்றி அதானி கூறுகையில் உலக அளவில் இந்தியா சோலார் மின் உற்பத்தியில் முன்னணி நாடாக விளங்க வேண்டும் என்பதே என் இலக்கு என்றார்.