.ஹானர் 6 எக்ஸ் ஸ்மார்ட்போன் ஜனவரி 24ல் வெளிவருகிறது
Jan 8, 2017, 23:19 IST

ஹவாய் நிறுவனமான ஹானர் அதன் புதிய படைப்பான ஹானர் 6 எக்ஸ் ஸ்மார்ட்போனை வருகிற 24ம் தேதி வெளியிட இருக்கிறது. என்று அதிகாரப் பூர்வமான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த போனானது அதன் ரேம் அளவை பொறுத்து 3 வகைகளில் வெளி வர இருக்கிறது.
3 ஜிபி ரேம் 32 ஜிபி போன் மெமரி மற்றும் 4ஜிபி ரேம் 32 ஜிபி போன் மெமரி, 4ஜிபி ரேம் 62 ஜிபி போன் மெமரி என மூன்று வகைகளில் வெளி வருகிறது. அதன் சில சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சிறப்பம்சங்கள்:-
- இரண்டு சிம் கார்டு செருகும் வசதி
- 0 ஆண்ட்ராய்டு வெர்ஷன் மற்றும் 5. 5 இன்ச் திரையின் அளவு
- 1080 x 1920 பிக்சல்களுடன் கூடிய வீடியோ ரெக்கார்டிங் வசதி
- 5 டிகிரி வளைந்த திரை இதனால் கீழே விழுந்தாலும் பாதுகாப்பாக இருக்கும்.
- 128 ஜிபி மெமரி கார்டு செருகும் வசதி
- 12 மெகா பிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன்பக்க கேமரா வசதி
- 3340 எம்ஏஎச் திறனுடன் கூடிய பேட்டரி வசதி
- வைபை, ஜிபிஎஸ், 4 ஜி, 3ஜி வசதி.
- 162 கிராம் எடை மட்டுமே கொண்டது.