ஒப்போ ஏ57 மொபைல் போன் பிப்ரவரி 3ல் வெளிவருகிறது

சமீபத்தில் தயாரிக்கப்பட்ட செல்பீ சுய ஸ்மார்ட்போன் ஆன ஓப்போ ஏ57 பிப்ரவரி 3 ஆம் தேதி சந்தைகளில் வெளிவரும் என திட்டமிட்டுள்ளது. ஒப்போ மொபைல் போன் பெரும்பாலும் செல்பி எடுப்பவர்களை கவனத்தில் கொண்டு வெளிவருகிறது. இந்த பொபைல் போனும் அதே போல்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த நவம்பர் மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட இந்த வகையிலான மொபைல் போனின் விலை 16000 ரூபாய் மட்டுமே. இது ரோஸ் மற்றும் தங்கம் ஆகிய இரண்டு வண்ணங்களில் சந்தைக்கு வந்தது.
சிறப்பம்சங்கள்:-
ஆண்ட்ராய்டு வெர்சன் 6.0 மற்றும் இரட்டை சிம் கார்டு செருகும் வசதி, ஆக்டா கோர் 1.4 ஜிகா ஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி மற்றும் 3 ஜிபி ரேம் வசதியுடன் இயங்குகிறது.
16 மெகா பிக்செல் வசதியுடன் கூடிய முன்பக்க கேமரா மற்றும் 2.5 டிகிரி வளைந்த கண்ணாடி, 5.2அங்குல எச்டி திரை 13 மெகா பிக்செல் பின்பக்க கேமரா மற்றும் இரண்டு கேமராக்களிலும் ப்ளாஷ் வசதி மற்றும் கைரேகை லாக்கிங் வசதி.
போனின் நினைவக மெமரி 32 ஜிபி மற்றும் 128 ஜிபி வரையிலான மெமரிகார்டு செருகும் வசதி. 2900 எம்ஏஎச் பேட்டரி திறன் மற்றும் ப்ளுடூத், வைபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி செருகும் வசதியுடன் 147 கிராம் கொண்ட மொபைல் போனாக வெளிவருகிறது.