Tamil Wealth

டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன்!!

டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன்!!

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் பயனர்களுக்கான ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போனை டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள்:

டிஸ்பிளே: டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவினைப் பொறுத்தவரை பெரிய அளவில் 7 இஞ்ச் அளவில்1640X720பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே அமைப்பைக் கொண்டுள்ளது.

மெமரி: IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

பிராசஸர்: டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் ஹைஒஎஸ் 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது.

கேமரா: பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: பின்புறத்தில் கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி: 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Share this story