Tamil Wealth

வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை அம்சங்கள்

வாட்ஸ் அப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை அம்சங்கள்

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட நபருக்கு செய்தியை அனுப்பும் வசதியுடன் உருவாக்கப்பட்டதுதான் வாட்ஸஅப். இது குறிப்பிட்ட காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியை எட்டியது. வாட்ஸ் அப் மூலம் கருத்தினை பரிமாரிக்கொள்ளலாம், சாட்டிங் செய்யலாம். இதில் உள்ள சில அடிப்படை அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

வாட்ஸ் அப்பில் சில அடிப்படை அம்சங்கள்:-

• வாட்ஸ் அப்பில் பல நபர்களை ஒரு குருப்பாக சேர்த்து ஒன்றினைக்க முடியும். இதன் மூலமாக பல நபர்களுக்கு ஒரு செய்தியை விரைவாக தெரிந்து கொள்ள வழிவகை செய்கிறது.
• மொபைலில் பயன்படுத்தக்கூடிய வாட்ஸப்பை டெஸ்க்டாப்பிலும் பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போன் கேமராவை கம்ப்யூட்டரின் மீது சில நொடிகள் காண்பித்தால் பார் கோடு ஸ்கேன் செய்து உங்கள் அக்கவுண்டை லாக் இன் செய்யலாம்.
• வாட்ஸ் அப்பில் நாம் கடைசியாக எப்போது பயன்படுத்தினோம், நமது புகைப்படம் போன்றவை நமது தொடர்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் படி செய்யலாம்.
• உங்களுக்கு வந்த செய்தியை படிக்க நேரம் இல்லாமல் இருக்கும் போது அதை ஆர்ச்சிவ் செய்வதன் மூலம் நமக்கு நேரம் கிடைக்கும் போது அதை படிக்க முடியும்.
• நீங்கள் அனுப்பிய மெசெஜ் அனுப்பபட்டதை உறுதி செய்ய ஒரு கிரே கலர் சரி திரையில் காட்டப்படும். அதுவே இரட்டை சரியாக இருந்தால் அது அவருக்கு பெறப்பட்டதை உறுதி செய்கிறது. நீங்கள் அனுப்பிய செய்தியை அவர் படித்து விட்டால் அந்த குறியானது இரட்டை நீல நிற டிக் காண்பிக்கப்படும்.
• ஒரு குறிப்பிட்ட நபர் உங்களுக்கு மெசெஜ் செய்யாமல் இருக்க செட்டிங்க்ஸ் அக்கவுண்ட்- பிரைவசி  பிளாக் என்ற வசதியின் மூலம் தவிர்க்கமுடியும்.
• வாட்ஸ் அப்பை ரிமுவ் செய்து இன்ஸ்டால் செய்யும் போது கூகிள் டிரைவ் ஐகிளவுட் வழியாக மெசெஜை பேக்கப் செய்து கொள்ளலாம். ஆனால் இது பாதுகாப்பானது அல்ல.
• உங்கள் செயலியில் டேட்டா அதிகமாக செலவானதாக உணர்ந்தால் டேட்டாஸ்டோரேஜ் யூசேஜ் ஆப்ஷனை செலக்ட் செய்து இமேஜ் மற்றும் வீடியோ தானாகவே பதிவிறக்கம் செய்யாமல் தடுக்கலாம்.

Share this story