Tamil Wealth

சியோமியின் அசரவைக்கும் டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவி!!

சியோமியின் அசரவைக்கும் டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவி!!

சியோமி நிறுவனம் எம்ஐ டிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவியினை நேற்று அறிமுகம் செய்து உள்ளது. இந்த சியோமி டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் குறித்த விவரங்களை நாம் பார்க்கலாம்.

டிஸ்பிளே: எம்ஐ டிவி லக்ஸ் டிவியானது 55 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் டிரான்ஸ்பேரன்ட் 4K OLED 10 பிட் பேனல் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

கூடுதல் சிறப்பு அம்சம்: சியோமி டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவியானது, 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் ஏஐ மாஸ்டர் ஸ்மார்ட் என்ஜின், மீடியாடெக் 9650 கஸ்டம் மேட் டிவி சிப், ஏஐ மாஸ்டர் ஆடியோ போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

பிராசஸர் வசதி: சியோமி எம் ஐடிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவியானது  குவாட்கோர் கார்டெக்ஸ் 73 மீடியாடெக் எம்டி9650 பிராசஸர் வசதியினையும், மாலி ஜி52 எம்சி1 ஜிபியு வசதியினையும் கொண்டுள்ளது.

இந்த டிவியானது புரொஃபஷனல் கேம் மோட், ஆட்டோமேடிக் லோ லேடென்சி மோட் கொண்டுள்ளது.

மெமரி:  சியோமி டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவியானது 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி போன்றவற்றினையும், மேலும் எம்யுஐ டிவியினையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: சியோமி டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவியானது வைபை, ப்ளூடூத் 5, 3xஹெச்டிஎம்ஐ 2.1, 2x யுஎஸ்பி போன்றவற்றினையும், கூடுதல் சிறப்பம்சமாக  டால்பி அட்மோஸ், டிடிஎஸ் ஆடியோ கொண்டுள்ளது.

Share this story