வோடாபோன் 4ஜி சேவைக்கு மாறும் எளிய வழிகள்

நீங்கள் ஏற்கனவே வோடபோனின் வாடிக்கையாளராக இருந்தால் இந்த சேவையை மிகவும் எளிதாக பெற முடியும். 4ஜி சேவைக்கு நீங்களாகவே மாறும் வசதி உள்ளது. இதற்காக எந்த ஒரு வரிசையிலும் நிற்க வேண்டிய தேவையில்லை. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டும் தான் உங்கள் பகுதியில் வோடபோன் 4ஜி ரெடி சிம் கிடைக்குமா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வோடபோன் 4ஜி சேவைக்கு மாறினால் 1 ஜிபி இலவச 4ஜி இண்டர்நெட் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். வோடபோன் 4ஜி சேவைக்கு மாறும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
வோடாபோன் 4ஜி சேவைக்கு மாறும் எளிய வழிகள்:-
அருகாமையில் உள்ள வோடபோன் ஸ்டோரில் உங்கள் ரெடி சிம் கார்டுக்கான வேண்டுகோளை கொடுக்க வேண்டும். ‘சரியான அடையாள அட்டை, 4ஜி மொபைல் போன்றவற்றை ஊழியர் சரிபார்த்த பின்பு புதிய 4ஜி சிம்மை கொடுப்பார்.
உங்களிடம் கொடுத்த 4ஜி சிம்மை ஆக்டிவேட் செய்ய “SIMEX < புது சிம் கார்டின் 19 – 20 அடையாள எண்> டைப் செய்து 55199 எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்ய வேண்டும்.
உங்களுக்கு பதில் செய்தி கிடைத்த 2 மணி நேரத்திற்குள் அதே எண்ணிற்கு புது சிம் கார்டின் கடைசி 6 எண்களை கொடுக்க வேண்டும்.
பழைய சிம் கார்டிற்கு ஆக்டிவேட் உறுதி செய்யப்பட்ட தகவல் வந்ததும் புதிய சிம் கார்டை செருகி வோடபோன் 4ஜி சேவையை பயன்படுத்துங்கள்.