சீட் பெல்ட் போடாவிட்டால் ஏர் பேக் வேலை செய்யாதா?

சாலை விபத்துகள் என்பது இப்போதைய நிற்க நேரமில்லாத காலகட்டத்தில் சாதாரண விஷயமாக உள்ளது, அதற்கு முக்கிய காரணம் நாம் சாலை விதிகளைப் பின்பற்றாமைதான். காரில் செல்லும் பலரும் உட்கார்ந்த உடனே சீட் பெல்ட் போட வேண்டும் என்பதை மறந்தே போய் விடுகின்றனர்.
பலரும் பல லட்சங்கள் செலவழித்து கார் வாங்குகையில், விபத்தின் போது நம்மைப் பாதுகாக்க ஏர்பேக் உள்ளதா? என்று சோதிக்கின்றனர், ஆனால் நாம் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணியவில்லை என்றால், ஏர்பேக் அமைப்பு பயனற்றது என்பதை மறக்கின்றனர்.
விபத்தின் போது நீங்கள் சீட் பெல்ட் அணிந்திருக்கும் பட்சத்தில் காயம் முற்றிலும் ஏற்படாது என்று சொல்லிவிட முடியாது. சீட் பெல்ட்கள் அணியப்படாதபோது மிகவும் கடுமையான காயங்களை ஏற்படுத்துகின்றன என்றுதான் சொல்ல முடியும்.
மேலும் சீட் பெல்ட்டுடன் இணைந்து ஏர்பேக்குகள் நம்மை இருக்கும் இடத்தில் அப்படியே வைத்திருக்க உதவுகின்றன. அதாவது சீட் பெல்ட்டுடன் இணைந்து பணியாற்றுகிறதே என்பதே இதில் இருந்து புலப்படும் உண்மை. ஏர்பேக்குகள் இருக்கு நமக்கு என்ன கவலை என்று எண்ணினால், உண்மையில் பாதிக்கப்படுவது நாமாகத் தான் இருப்போம்.