அசத்தலான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
டிஸ்பிளே: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 7.6 இன்ச் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 2208 x 1768 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன், இரண்டு டிஸ்பிளேவினையும் HDR10 + ஐ ஆதரிப்பதாய் உள்ளது.
பிராசஸர்: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிளஸ் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது.
இயங்குதளம்: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.
கேமரா: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி லென்ஸ், 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினையும் முன்புறத்தில் 10எம்பி கேமராவினையும் கொண்டுள்ளது.
மெமரி: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் 12எம்பி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்2 5ஜி ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளதாக உள்ளது.