சிறப்பான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3!!

மொபைல் போன் நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி வாட்ச் 3 ஐ வெளியிட்டுள்ளது.
மாடல்: இந்த ஸ்மார்ட்வாட் ஆனது 45 மிமீ அளவிலும் மற்றும் 41 மிமீ அளவிலும் வெளிவந்துள்ளது.
டிஸ்பிளே: இந்த கேலக்ஸி வாட்ச் 3 அமோலேட் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 360 x 360 பிக்சல்கள் திரையினையும் 45 மிமீ அளவில் 1.4 அங்குல அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டு உள்ளது. மேலும் 41 மிமீ அளவில் 1.2 அங்குல அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் ஆனது சுழற்றக்கூடிய பெசல்கள் உள்ளது.
பாதுகாப்பு அம்சம்: கேலக்ஸி வாட்ச் 3 கார்னிங் கொரில்லா க்ளாஸ் டிஎக்ஸ் பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டதாக உள்ளது.
நிறம்: கேலக்ஸி வாட்ச் 3, 41 மிமீ மிஸ்டிக் ப்ரான்ஸ் மற்றும் மிஸ்டிக் சில்வர் வண்ணத்தினைக் கொண்டுள்ளது.
மெமரி: இது ஆண்ட்ராய்டு 5.0, 1.5 ஜிபி ரேம், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் வசதியினைக் கொண்டு உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத், வைபை உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
பேட்டடி: கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் 45 மிமீ அளவில் 340 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 41 மிமீ அளவி 247 எம்ஏஹெச் பேட்டரி வசதியினைக் கொண்டுள்ளது.