விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்7 மாடலை இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆகவுள்ளது. இந்த கேலக்ஸி டேப் எஸ்7 மாடல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு விழாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சாம்சங் டேப்லெட் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று தெரிகிறது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 விலை- ரூ. 62,200
டிஸ்ப்ளே: இந்த டேப்லெட் 11 இன்ச் WQXGA எல்டிபிஎஸ் டிஎஃப்டி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது,.
பிராசஸர் : மேலும் இது ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
மெமரி : மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.
கேமரா: கேமராவினைப் பொறுத்தவரை, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு: மேலும் 4ஜி (ஆப்ஷனல்), வைபை 6, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் போன்றவற்றினை இணைப்பு ஆதரவாக கொண்டுள்ளது.
பேட்டரி: பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 8000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.