Tamil Wealth

விரைவில் வெளியாகத் தயார் நிலையில் சாம்சங் கேலக்ஸி எம் 51!

விரைவில் வெளியாகத் தயார் நிலையில் சாம்சங் கேலக்ஸி எம் 51!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் குறித்து சமீபத்தில் வெளியான டீசரில் ஸ்மார்ட்போன் குறித்த கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக இருக்கும்.

டிஸ்பிளே: மேலும் இந்த ஸ்மார்ட்போன் டிஸ்பிளேவைப் பொறுத்தவரையில் FHD + தெளிவுத்திறனைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.

கேமரா: கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் குவாட்-ரியர் கேமரா அமைப்பினைக் கொண்டிருக்கும்.

மேலும் பின்புறத்தில் 64MP முதன்மை லென்ஸினைக் கொண்டிருக்கும் என்றும், மேலும் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார், மேக்ரோ மற்றும் ஆழமான லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது.

செயலி: கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 செயலி கொண்டிருக்கும்.

மெமரி: கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் உள்ளமைப்பு வசதியினைக் கொண்டிருக்கும்.

இயங்குதளம்: கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் ஆனது Android 10 மூலம் இயங்கும் தன்மை கொண்டிருக்கும்.

பேட்டரி: சாம்சங் கேலக்ஸி எம் 51 ஸ்மார்ட்போன் 7000 எம்ஏஹெச் பேட்டரி அம்சத்தினைக் கொண்டிருக்கும். இது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டிருக்கும்.

Share this story