டிக்டாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்!!

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் கடந்த சில வருடங்களில் அசுர வளர்ச்சியினைக் கண்டு வருகிறது, தகவல் தொழில்நுட்பத்துறை மட்டுமல்லாது ஜியோ மார்ட், ஜியோ ஸ்டோர் என பிற சேவைகளையும் வழங்கி வருகின்றது.
அந்தவகையில் தற்போது இந்தியாவின் ஜியோ நிறுவனம் டிக் டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்துடன் இந்தியாவில் கூட்டு சேர்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது.
அதாவது சமீபத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சீன அரசின் 52 செயலிகளை தடைசெய்ய வேண்டும் என இந்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனால் டிக்டாக் செயலி தடைசெய்யப்பட்டதால் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் பல ஆயிரம் கோடி அளவில் இழப்பை சந்தித்துள்ளது.
தற்போது பைட் டான்ஸ் ஜியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியாவில் கால் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இதன் தலைமை அலுவலகமானது மும்பையில் அமைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவினைப் பொறுத்தவரை பைட்டான்ஸ் நிறுவனமானது டிவிட்டர் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.