Tamil Wealth

பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள ரெட்மி 9 ஸ்மார்ட்போன்!

பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள ரெட்மி 9 ஸ்மார்ட்போன்!

மொபைல் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் ரெட்மி 9 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

  1. ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மெமரி வகையின் விலை - ரூ.8,999
  2. ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மெமரி வகையின் விலை - ரூ.9,999

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

டிஸ்பிளே : ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது 720x1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது .

சிப்செட் : ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம்: மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமரா: ரெட்மி 9 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரி: ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி : ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Share this story