ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள ரியல்மி சி15 ஸ்மார்ட்போன்!!

ரியல்மி நிறுவனம் ரியல்மி சி15 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியிட்டு நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியது.
டிஸ்பிளே: ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் 6.5 அங்குல திரை அளவினைக் கொண்டதாக உள்ளது.
மெமரி: ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு எஸ்டி கார்டு என 3 கார்டு கொண்ட ஸ்லாட்டினை 256 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் ஆனது 3 + 32 ஜிபி மற்றும் 4 + 64 ஜிபி என இரண்டு மெமரி அளவுகளைக் கொண்டுள்ளது.
சிப்செட்: ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் செயலி கொண்டு இயங்குவதாகவும், மேலும் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.
கேமரா: ரியல்மி சி 15 ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி மற்றும் 2 எம்.பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.