வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C-35 ராக்கெட்

ஆந்தர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து PSLV C-35 ராக்கெட் இன்று காலை 9.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டின் மூலம் இந்தியாவின் 3 செயற்கைக்கோள்களும் அல்ஜீரியா (அல்சாட்1, அல்சாட் 2), கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 5 செயற்கைக்கோள்களும் இருவேறு சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இதில் இந்திய செயற்கை கோளான ஸ்காட்சாட்-1 கடல் மற்றும் வானிலை ஆராய்ச்சிகளுக்காக அனுப்பப்படுகிறது. 312 கிலோ எடை கொண்ட ஸ்காட்சாட்-1 செயற்கைக்கோள் புவியிலிருந்து 730 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது. 8 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 8 செயற்கைக்கோள்களையும் இருவேறு சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும். இந்த வெற்றி இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.