Tamil Wealth

இந்தியாவில் ஓப்போ ரெனோ4 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஓப்போ நிறுவனம்!!

இந்தியாவில் ஓப்போ ரெனோ4 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட்ட ஓப்போ நிறுவனம்!!

ஒப்போ நிறுவனம் ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஓப்போ ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகமாகியுள்ளதால் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

டிஸ்பிளே: இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 3D 90Hz AMOLED 90Hz வளைந்த டிஸ்ப்ளே வசதி கொண்டுள்ளது.

பிராசஸர்: ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதியி மற்றும் அட்ரினோ 618 GPU வசதி கொண்டதாகவும் உள்ளது.

மெமரி: ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன்  8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி UFS 2.1 மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2 வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா: பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி மோனோ கேமரா போன்றவற்றினையும், முன்பக்கத்தில் 32 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சம்: ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

பேட்டரி: இது 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.

Share this story