Tamil Wealth

ஏ52 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி வேரியண்ட்டை அறிமுகம் செய்த ஓப்போ நிறுவனம்!

ஏ52 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி வேரியண்ட்டை அறிமுகம் செய்த ஓப்போ நிறுவனம்!

ஓப்போ நிறுவனம் ஓப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் 8ஜிபி வேரியண்ட்டினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே: ஒப்போ ஏ 52 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் FHD+ பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவினையும், மல்டிமீடியா ஸ்ட்ரீமிங்கிற்கான சிறந்த-இன்-கிளாஸ் காட்சியை கொண்டும் உள்ளது.

பேட்டரி: இது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

கேமரா:  ஒப்போ ஏ 52 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றையும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: ஒப்போ ஏ 52 ஸ்மார்ட்போன் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Share this story