Tamil Wealth

ஒன்பிளஸ் 3டி மொபைல் போன் விற்பனைக்கு வந்தது

ஒன்பிளஸ் 3டி மொபைல் போன் விற்பனைக்கு வந்தது

சமீபத்தில் வளர்ந்து வரும் முன்னணி கம்பெனிகளில் ஒன்பிளஸ் நிறுவனமும் ஒன்றாகும். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் தான் இந்த நிறுவனம் 3டி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை போலவே அதன் மெமரியை பொறுத்து (அதாவது ரோம் 64 ஜிபி, 128 ஜிபி) இரண்டு வகையாக பிரித்து விற்பனைக்கு கொண்டு வந்தது. அது பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அதை இப்போது பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்:

 3டி ஸ்மார்ட் போன்
 ஆண்ட்ராய்டு 6.0.1 வெர்ஷன்
 கொரில்லா கிளாஸ் வசதி டிஸ்பிளே அவ்வளவு சீக்கிரமாக உடையாது.
 1080 x 1920 பிக்சல்கள் கூடிய வீடியோ ரெக்கார்டிங் வசதி
 5.5 இன்ச் டிஸ்ப்ளே
 6 ஜிபி ரேம்
 1.6 குவாட் கோர் பிராசசர்
 64 ஜிபி போன் மெமரி, 128 ஜிபி போன் மெமரி
 எல்இடி பிளாஷ் வசதி
 16 மெகா பிக்செல் பின்புற கேமரா வசதி
 16 மெகா பிக்செல் முன்பக்க செல்பி கேமரா வசதி
 ஜிபிஎஸ்,ஜிபிஆர்எஸ் வசதி
 வைஃபை வசதி
 3400 எம்ஏஎச் பேட்டரி பவர்
 158 கிராம் எடை கொண்டது.
இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட இந்த மொபைல் போனின் விலை 30000 -35000 வரை மட்டுமே.

Share this story