புதிய ஹுண்டாய் டூஸான் எஸ்யூவி

தென் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம் புதிய ஹுண்டாய் டூஸான் எஸ்யூவி மாடலை தயாரித்து வருகிறது. இந்த கார் தீபாவளிக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த காரின் டிசைன் ஹுண்டாவின் ப்ளூயிடிக் ஸ்கள்ப்ச்சர் 2.0 அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
குரோம் ஸ்டைலான உடைய பிரண்ட் கிரில், ஸ்டைலான ஹெட்லேம்ப்கள், புதிய ஸ்டைலான பம்பர்கள், எல்யிடி டெயில்லைட்கள் கொண்டுள்ளது. எஞ்ஜினை பொருத்தவகையில் 134 பிஎச்பியையும் மற்றும் 181 பிஎச்பியையும் வெளிப்படுத்தும் வகையிலான 2 டியூனிங் செய்யக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கியர்பாக்ஸ் பொருத்த வகையில் 6 ஸ்பீட் மேனுவல் அல்லது 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்ஸ், மியூசிக் சிஸ்டம், யூஎஸ்பி, புளூடூத் கனெக்ட்விட்டிவிட்டி எலக்ட்ரிக் லிப்ட் கேட், பானராமிக் சன்ரூப் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த காரின் விலை 20 லட்சம் முதல் 25 லட்சம் வரைக்குள் இருக்கலாம்.