Tamil Wealth

என் கிரிஃப்ஷன் வசதி பேஸ்புக்கிலும் அறிமுகம் செய்யப்பட்டது

என் கிரிஃப்ஷன் வசதி பேஸ்புக்கிலும் அறிமுகம் செய்யப்பட்டது

வாட்ஸ் அப்பில் என் கிரிஃப்ஷன் வசதி உள்ளது. அதாவது நாம் உரையாடும் செய்திகள் உரையாடும் இருவரை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருக்க இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பேஸ்புக் மெஜன்சரிலும் இந்த தனிப்பட்ட செக்யூரிட்டி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நாம் அனுப்பும் குறுஞ்செய்தி மற்றும் வாய்ஸ் மெசஜ் வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கவும் மற்றவர்களால் அதை பார்க்க இயலாத முறையில் செய்யலாம். இதற்கு தனது மெசஞ்சரை புதிதாக ஏற்றிக்கொள்ளலாம். உரையாடல் செய்யும் போது வலது புறத்தில் மேல் பகுதியில் செட்டிங்கிற்கு சென்று ரகசிய உரையாடல் குறியை கிளிக் செய்யவும். இதன் முக்கிய அம்சமே உரையாடல் செய்பவர்கள் தவிர மற்ற யார் பார்த்தாலும் அவர்களுக்கு கலைத்து போடப்பட்ட குறியீடுகள் போன்று காட்சியளிக்கும். இது தற்போதைய கால கட்டத்தில் மிக முக்கிய பங்கினை வகுக்கிறது. இதனை அனைவரும் பயன்படுத்தி தங்களது உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

Share this story