மோட்டோ ஜி5 தொலைபேசி வெளியாகும் தேதி!

இன்றைய காலத்தில் தொலைபேசி மனிதனின் மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. தொலைபேசி தயாரிப்பில் பல நிறுவனங்கள் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எப்போதும் மதிப்பு அதிகம். மேலும் அந்த நிறுவனத்தின் அடுத்த படைப்பு எப்போது வெளியாகும் என எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள்.
அந்த வகையில் மோடரோலோ நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் மக்களிடையே நல்ல மதிப்பை பெற்றது. மோட்டோ ஜி5 மற்றும் ஜி5+ தொலைபேசியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த போகிறது. அதன் சில முக்கியமான கருவிகளை இப்போது பார்க்கலாம்.
சிறப்பம்சங்கள்:-
- தங்கம் மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி நினைவக மெமரி கொண்ட கருவியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இ- காமர்ஸ் இணையதளத்தில் இந்த தொலைபேசி வெளியிடப்படும் என செய்தி பரவியுள்ளது. 128 ஜிபி மெமரி அட்டை செருகும் வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 13 மெகா பிக்சல் பின்புற கேமரா, 5 மெகா பிக்செல் முன்பக்க கேமராவுடன் 2800 எம்ஏஎச் பேட்டரி திறனுடன் வெளிவந்துள்ளது.
- மோட்டோ ஜி5+ கருவியானது 5.5 திரையுடன் 4ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 7.0 வெர்சனை கொண்டதாக வரும் 12 மெகாபிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 5 மெகா பிக்செல் முன்பக்க கேமராவுடன் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோ ஜி5 கருவியானது மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் விற்பனைக்கு பிறகு மோட்டோ ஜி5 விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மார்ச் முதல் வாரத்தில் இருந்து பிரிட்டனில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.