Tamil Wealth

சுரங்கபாதை வடிவில் நவீன பஸ்

சுரங்கபாதை வடிவில் நவீன பஸ்

சீனாவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக பஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். சீனாவின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு வருகிறது. இதனை குறைப்பதற்க்காக சீனா அரசு பல்வேறு நடைவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசல் தீர்வுக்காக அரசு புதிய நவீனரக டிராம் வடிவ பஸ் அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த பஸ் சாலையில் செல்லும் போது அதன் அடி பகுதியில் வாகனங்கள் புகுந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பஸ் 60.60 மீட்டர் நீளமும் 7.80 மீட்டர் அகலமும் 4.50 மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது.மேலும் பேட்டரியால் இயங்க கூடிய வகையில் இந்த பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பஸ் டிராம் தண்டவாளம் போன்ற இரும்பு பாதையில் ஓடுகிறது. மேலும் வருங்காலத்தில் இந்த பஸ் ஒட்டுநர் இல்லாமல் தானாக இயங்க கூடிய வகையில் வடிவமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது.

Share this story