மலிவு விலையில் வெளியாகியுள்ள எல்ஜி நிறுவனத்தின் LG K31 ஸ்மார்ட்போன்!

எல்ஜி நிறுவனம் மலிவு விலையில் LG K31 ஸ்மாட்போனை அறிமுகம் செய்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம் ஆகியுள்ளதால் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.
LG K31 ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 11,228
டிஸ்ப்ளே: எல்ஜி கே 31 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் எச்டி பிளஸ் கொண்டுள்ளது, மேலும் 720 x 1520 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது நாட்ச் ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சம்: எல்ஜி கே 31 ஸ்மார்ட்போன் கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது.
பிராசஸர் : ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி 6762 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
மெமரி: 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை சேமிப்பு வழங்குவதாக உள்ளது.
கேமரா: எல்ஜி கே 31 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் கொண்ட எஃப், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் எஃப் போன்றவற்றினையும், 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.
பேட்டரி: 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.
இயங்குதளம்: எல்ஜி கே 31 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.
இணைப்பு ஆதரவு: 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.