ரூ. 1599 விலையில் சீனாவில் வெளியாகியுள்ளது லாவா பல்ஸ் மொபைல்!!

லாவா நிறுவனம் சீனாவில் ஃபீச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது. லாவா பல்ஸ் போன் சாதாரண பீச்சர் போனாக இருந்தாலும் இதய துடிப்பு, இரத்த அழுத்தம் போன்றவற்றினைக் கண்காணிக்க உதவுகின்றது.
லாவா பல்ஸ் மொபைல் போன் ஆனது ரோஸ் கோல்டு நிறத்தில் வெளியாகியுள்ளது. லாவா பல்ஸ் போன் குறித்த சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்,
லாவா பல்ஸ் ஃபீச்சர் போனின் விலை- ரூ. 1599
டிஸ்பிளே: லாவா பல்ஸ் போன் 2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA 65K கலர் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
மெமரி: லாவா பல்ஸ் போன் 32 எம்பி ரேம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் இது பாலிகார்போனைட் பாடி, மிலிட்டரி கிரேடு சான்று கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு: லாவா பல்ஸ் போன் 2ஜி ஜிஎஸ்எம் 900/1800மெகாஹெர்ட்ஸ், ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்: கேமரா மற்றும் வீடியோ பதிவு செய்யும் வசதியினையும் கொண்டுள்ளது. மேலும் வயர்லெஸ் எஃப்எம், ஆட்டோ கால் ரெக்கார்டிங் போன்றவற்றினை சிறப்பு அம்சங்களாகக் கொண்டுள்ளது.
பேட்டரி: லாவா பல்ஸ் போன் ஆனது பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 1800 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.