Tamil Wealth

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அறிமுகம்

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அறிமுகம்

மஹிந்திரா நிறுவனம் அதிக எரிபொருள் சிக்கனம் தரும் புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கார்ப்பியோ இண்டெல்லி ஹைப்ரிட் டெக்னாலஜி (Intelli – hybrid technology) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 7% வரையிலான எரிபொருளை சேமிக்க உதவுகிறது. எஞ்ஜினை பொருத்த வகையில் 120 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் இண்டெல்லி ஹைப்ரிட் டெக்னாலஜி உடைய 1.99 லிட்டர் டர்போசார்ஜ் எஞ்ஜினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் ஐப்ரோ ஸ்டைலிலான எல்இடி பார்க்கிங் லைட்கள், மடங்கும் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஜிபிஎஸ் நேவிகேஷன், 6 இஞ்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மன்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல், புளூ கிரே இன்டீரியர் மற்றும் 17 இஞ்ச் அல்லாய் வீல்கள் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பத்துடன் இந்த புதிய ஸ்கார்ப்பியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை 9.33 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்கப்படுகிறது. விரைவில் இதனை போட்டிபோட்டுக்கொண்டு வாங்க வாடிக்கையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story