இண்டர்நெட் வசதி இல்லாமல் பேடிஎம் அப்பிளிகேஷன் மூலம் பணப்ப்ரிமாற்றம் செய்வது எப்படி?

சமீப காலமாக பேடிஎம் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டி வருகிறது. இந்த அப்பிளிகேஷன் மூலம் ரீசார்ஜ், டிக்கெட் முன்பதிவு, பில் செலுத்துதல், பொருள்களை வாங்குதல் போன்ற அனைத்தையும் செய்து கொள்ளலாம். மேலும் இதில் செய்யும் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் கேஷ் பேக் ஆபர்களையும் வழங்கி வருகிறது.மத்திய அரசினால் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிலிருந்து பணமில்லாமல் பரிமாற்றம் செய்யும் முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஊக்குவித்தும் வருகிறது. பெரும்பாலான கடைகளில் இப்போது பார்க்கப்படும் ஒரு வசனம் என்னவென்றால் “பேடிஎம் அக்செப்டெட் கியர்” தான். ஆனால் இதை பயன்படுத்த இண்டர்நெட் வசதி தேவை என்று எல்லாரும் எண்ணுகின்றனர். இண்டர்நெட் வசதி இல்லாமல் இந்த அப்ளிகேஷனை இயக்கும் முறையை இப்போது பாரக்கலாம்.
பணப்பரிமாற்றம் செய்யும் முறை:-
- பேடிஎம் அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ள வேண்டும். இதற்கு ஸ்மார்ட்போன் அல்லது கணினி கட்டாயம் வேண்டும்.
- அக்கவுண்ட் ஒபன் செய்யும் போதே உங்களது வங்கி கணக்கை இதில் சேர்க்க வேண்டும்.
- பதிவு செய்த மொபைல் நம்பரிலிருந்து 1800 – 1800- 123 என்ற எண்ணிற்கு கால் செய்ய வேண்டும். சிறிது நேரத்தில் கடவு சொல் ஒன்று உங்களுக்கு வரும்.
- இப்போது எந்த எண்ணிற்கு பணப்பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டுமோ அந்த எண்ணிற்கு அனுப்ப வேண்டிய தொகையை குறிப்பிட்டு பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.