இந்தியாவில் அசர வைக்கும் அம்சங்களுடன் ஹானர் 9S ஸ்மார்ட்போன்!

ஹானர் 9S ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் நேற்று முன் தினம் அறிமுகம் ஆனது. இந்த ஹானர் 9S ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
டிஸ்பிளே: ஹானர் 9S ஸ்மார்ட்போன் 5.45 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
பிராசசர் வசதி: இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் மீடியா டெக் MT6762R SoC பிராசசர் வசதியினைக் கொண்டுள்ளது.
இயங்குதளம்: மேஜிக் UI 3.1உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
மெமரி: ஹானர் 9S ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்பில்டு மெமரியும், 512 ஜிபி மைக்ரோ எஸ்.டி கார்டு உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.
கேமரா: ஹானர் 9S ஸ்மார்ட்போன் பின்புறத்தில் உள்ள கேமரா 8 மெகா பிக்சலுடனும், முன்புறத்தில் உள்ள செல்ஃபி கேமரா 5 மெகா பிக்சல் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமராவினைக் கொண்டுள்ளது.
பேட்டரி: ஹானர் 9S ஸ்மார்ட்போன் 3,020 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.