அக்டோபர் மாதம் முதல் வாரம் விற்பனைக்கு வரவுள்ளது கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன்!!

கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் விற்பனையானது அக்டோபர் மாதம் முதல் வாரம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையானது அக்டோபர் மாதம் முதல் வாரம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிஸ்பிளே: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 5.81 இன்ச் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
பிராசசர்: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆனது அட்ரினோ 618 GPU வசதியினைக் கொண்டுள்ளது.
மெமரி: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 6 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி வசதியினையும் கொண்டுள்ளது.
இயங்குதளம்: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக உள்ளது.
கேமரா: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 12.2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு வசதி: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 2 மைக்ரோபோன்களைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பேட்டரி: கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் 3080 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும் உள்ளது.