அசரவைக்கும் அம்சங்களுடன் அமெரிக்காவில் களம் இறங்கியுள்ள கூகுள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன்.!!

கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது.
டிஸ்பிளே: கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் 5.81 இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட 1080 X 2340 பிக்சல்கள் உடைய ஓல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.
சிப்செட்: இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது. மெமரி: கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் 128 ஸ்டோரேஜ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இயங்குதளம்: கூகுள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாக உள்ளது.
கேமரா: பகூகுள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 12MP பின்புற கேமரா, முன்புறத்தில் 8MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு: இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 மிமீ ஆடியோ ஜாக், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
பேட்டரி: 3140 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.