Tamil Wealth

அசத்தலான வித்தியாசத்தில் வரும் ஜியோமி எம்ஐ 6

அசத்தலான வித்தியாசத்தில் வரும் ஜியோமி எம்ஐ 6

2017 ல் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட ஜியோமி எம்ஐ 6 மொபைல் போனின் முக்கியமான சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு, விலை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதை பற்றிய சில விவரங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்:-

2016 ஆம் ஆண்டு மொபைல் போனின் உடலமைப்பு பீங்கானால் உருவாக்கப்பட்டு அந்த அளவிற்கு பேசப்படாத ஜியோமி மி மிக்ஸ் போன்றே இந்த மொபைல் போனும் பீங்கானால் செய்யப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம் செயல்பாட்டுடன் வளைந்த திரையை கொண்டதாக உள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு திரைகளை பார்க்கும் வசதியுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் டெக் ஹெலியோ எக்ஸ் 30 என்ற இரண்டு செயலியின் மூலம் இயங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 மெகா பிக்செல் தெளிவுடன் பின்பக்க கேமரா செயல்படும். ஆண்ட்ராய்டு வெர்ஷன் 7.0 மூலம் இயங்கும். 128 ஜிபி முதல் 256 ஜிபி நினைவக வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள முக்கியமான தொலைபேசிகளான சாம்சங் கேலக்ஸி எஸ் 8 மற்றும் எல்ஜி ஜி 6 மொபைல் போனின் வரவுக்கு பின்னரே இந்த மொபைல் போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியா டெக் செயலி மூலம் இயங்கும் மொபைலின் விலை ரூபாய் 19800/- மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் செயலி மூலம் இயங்கும் மொபைல் ரூ 24800/- இரட்டை முனைகளுடன் வளைந்த காட்சி தரும் மொபைலின் விலை ரூபாய் 29800/- விலைக்கும் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this story