ஃப்யூச்சர் பஸ்

உலகிலேயே சாதாரண போக்குவரத்து சூழலில் தானாக இயங்க கூடிய பஸ்ஸை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முதன் முதலாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள ஹார்லேம் என்ற பகுதியிலிருந்து சிக்சிபோல் விமான நிலையம் வரையில் உள்ள 20 கி.மீ தூரத்தினை இந்த பஸ் தானகா இயங்கி அதில் வெற்றி பெற்று உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தானியங்கி டிரக்குகளை கண்டுப்பிடித்த இந்த நிறுவனம் அதே தானியங்கி தொழிநுட்பத்துடன் இந்த பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு புதிய தொழிநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பஸ்ஸிற்க்கு ஃப்யூச்சர் பஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பஸ்ஸில் சிட்டிபைலட் என்ற தானியங்கி தொழிநுட்பத்தினை கொண்டுள்ளது.மேலும் பாதசாரிகள் குறிக்கிடும்போது தானாக பிரேக் பிடித்து சிக்னல்களை சரியாக கண்டுகொண்டு இயங்குகிறது. பேருந்து நிலையங்களையும் சரியாக கண்டுகொண்டு நிறூத்தவும், கதவுகள் தானாக திறந்து மூடவும் செய்கிறது இந்த நவீன பஸ். சுரங்க பாதையிலும் சிறப்பாக செயல் படுகிறது இந்த பஸ்.