Tamil Wealth

குழந்தைகளுக்கு ஏற்ற messaging apps ஏது தெரியுமா ?

குழந்தைகளுக்கு ஏற்ற messaging apps ஏது தெரியுமா ?

பெருகிவரும் தொழில் நுட்ப வீதியில், தினந்தோறும் புதிய புதிய application-கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் நமக்கு தேவையான பாதுகாப்பான ஒன்றை தேர்தெடுப்பதே கடினமாக இருக்கையில், உங்களின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் கட்டாயமான ஒன்று.

நாம் உபயோகிக்கும் சில messaging apps களை நம் குழந்தைகளும் பயன்படுத்தும் பொழுது முதலில் அவர்களின் திறமை கண்டு மகிழ்ந்துபோய் இருப்போம், பின்னர் நாம் குழந்தைகள் வயதுக்கு மீறிய சில தகவல்களை காணும் பொழுதோ, தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் அதை பயன்படுத்தும் பொழுதோ, அதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்து போய்விடுவோம்.

இந்த மாதிரி சில சிக்கல்களை தவிர்த்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவே சில messaging apps – கள் உள்ளன. குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி இந்த messaging apps-கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பாகும்.

Marimba chat, Kuddle, Yo போன்றவை 13 வயதுக்குள்ள குழந்தைகளுக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ள messaging apps கள் ஆகும், இதில் Marimba Chat 7 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காகவும், Kuddle ஒன்பது வயது குழந்தைகளுக்காகவும், Yo 12 வயது மேற்பட்ட குழந்தைகளுக்காகவும் உருவாக்கப்பட்டவை. இவைகள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் (parental control) இயங்கும் தன்மை கொண்டது. இருந்த போதிலும், குழந்தைகள் விரும்பும் வண்ணம் Text Msg, Photo Sharing, Stickers என பல சிறப்பு கொண்டவைகளாக உள்ளன.

Share this story