பட்ஜெட் விலையில் 3ஜிபி ரேம் கொண்ட கூல்பேட் ஸ்மார்ட்போன்
Jan 8, 2017, 23:14 IST

சமீப காலமாக 4ஜி தொலைபேசி உபயோகிப்பவர்களின் அளவு கணிசமாக உயர்ந்து வருகிறது. அதற்காக சமீப காலமாக கணிசமான வளர்ச்சியை எட்டி உள்ளது.பல நிறுவனங்களும் பல விலையில் தரத்துடன் கூடிய மொபைல் போனை வழங்கி வருகிறது. அந்த வகையில் கூல்பேட் விற்பனையில் சமீப காலமாக கணிசமான வளர்ச்சியை எட்டி உள்ளது. கூல்பேட் இப்போது 3 ஜிபி ரேம் வசதியுடன் கூடிய மொபைல் போனை வெறும் 12,200 க்கு அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இன்னும் சில நாள்களில் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது. அந்த போனின் சில சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.
3 ஜிபி ரேம்:-
- ஆண்ட்ராய்டு – 6.0 வெர்சன் மூலம் இயங்கும்
- 5 இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளே வசதி.
- 1280 x 720 பிக்சல்களுடன் கூடிய வீடியோ ரெக்கார்டிங் வசதி
- 3 ஜிபி ரேம் மற்றும் 1 ஜிகா ஹெட்ஸ் ப்ராசசர்.
- போன் மெமரி 16 ஜிபி மற்றும் 64 ஜிபி வரையிலும் மெமரி கார்டு கனெக்ட் செய்யும் வசதி கொண்டது
- பிளாஷ் வசதியுடன் கூடிய 16 மெகா பிக்சல் பின்பக்க கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன் பக்க கேமரா வசதி.
- ஜிபிஎஸ், வைஃஃபை, ஜிஎஸ்எம் கொண்ட 3ஜி, 4ஜி மொபைல்.
- 2500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி
- ஆடோமெட்டிக் லைட் சென்சார் வசதி