சீனா உருவாக்கிய உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி
விண்வெளி துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்க்கொண்டு வரும் சீனா தற்போது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை உருவாக்கி உள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் விண்வெளியில் உள்ள கோள்களையும், பால்வழி அண்டங்களையும் மற்றும் வேற்று கிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது. இந்த தொலைநோக்கியானது புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு இரண்டு மலைகளுக்கு இடையே 30 கால்பந்து மைதான அளவு பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 2011 இல் தொடங்கப்பட்டு மில்லியின் கணக்கான டாலர் செலவில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு இந்த தொலைநோக்கி கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த தொலைநோக்கியின் அனைத்து கட்டமைப்புகளும் நிறைவுற்றது. கடந்த ஞாயிற்று கிழமையிலிருந்து இந்த தொலைநோக்கியானது செயல்பட தொடங்கியுள்ளது. ஏற்கனவே விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் சீனாவுக்கு இந்த திட்டமானது இன்னொரு மைல் கல்லாக அமைந்துள்ளது. விண்வெளித் துறையில், சீனாவும் இந்தியாவினைப்போல் முன்னேறி வருகிறது.