Tamil Wealth

டார்ச் லைட் கொண்டு சமைக்கலாம் வாங்க

டார்ச் லைட் கொண்டு சமைக்கலாம் வாங்க

பல்வேறு விதமான டார்ச் லைட்டுகளை பயன்ப்படுத்தி பார்த்திருப்போம். அந்த காலத்தில் இரவு நேர வயலுக்கு காவலுக்கு செல்பவர்கள் நான்கு, ஐந்து பேட்டரிகளை கொள்ளும் பெரிய டார்ச்சுகளை பயன்படுத்தினர். மொபைல் போன் வாங்கும் பொழுது டார்ச் உள்ளதா? என தேடி பார்த்து வாங்கிய காலமும் உண்டு. இன்றைய சந்தையில் பல்வேறு விதமான டார்ச்சுகள் கிடைத்தாலும் , இந்த பிளாஷ் டார்ச் லைட் மினி சற்றே வித்தியாசமானது.

இந்த டார்ச் லைட் ஒளிதருவதுடன் நில்லாமல் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களான காகிதம் போன்றவற்றை தீ மூட்டக்கூடியது. பிளாஷ் டார்ச் லைட் மினி என பெயரிடப்பட்ட இந்த டார்ச்சை கொண்டு முட்டை போன்ற பொருட்களை சமைக்கவும் முடியும்.

2300 லுமென்ஸ் திறன் கொண்டு ஒளிதரும் இந்த பிளாஷ் டார்ச் லைட் மினி கடினமான சூழ்நிலைகளில் பெரிய உதவியாக இருக்கும். 2300 லுமென்ஸ் அளவு நெருப்பை உண்டாக்க போதுமானதாக இருப்பதால் வனவிலங்கு ஆய்வாளர்கள் , மலைப்பிரதேச வாசிகளுக்கு நெருப்பை உண்டாக்குவதற்கு ஓர் எளிய தீர்வாய் அமையும். வெறும் 400 கிராம் எடை கொண்ட இந்த டார்ச் 30 முதல் 100 நிமிடம் ஒளிதரும் திறன் கொண்டது.

Share this story