Tamil Wealth

36 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல்!

36 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல்!

ரிலையன்ஸின் ஜியோ வருகைக்கு பின்னர் பல்வேறு நிறுவனகளும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள பல விதமான ஆபர்களை வழங்கி வருகிறது. முக்கியமாக கால், செய்தி, டேட்டாவை இலவசமாக வழங்குவது போன்ற சேவைகளை விலை குறைவாக வழங்கி வாடிக்கையாளரை வேறு நிறுவனத்திற்கு மாறாமல் தக்க வைத்து கொள்கிறது. பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் ஆபர்கலை இப்போது பார்க்கலாம்.

ஆபர்கள்:-

ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் முதலில் சிம் வாங்குபருக்கு முதலில் வெல்கம் ஆபர் என்ற பெயரில் மூன்று மாத காலத்திற்கு இலவச வாய்ஸ் கால் மற்றும் இண்டர்நெட் சேவையை வழங்கியது. பின்னர் இந்த ஆபரை நியூ இயர் ஆபர் என நீட்டித்து மேலும் மூன்று மாதம் இலவசமாக பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இதை கருத்தில் கொண்ட பல்வேறு நிறுவனங்களும் பல்வேறு ஆபரை வழங்கி அசத்தியது.
ஜியோவின் கால நீட்டிப்பு எதிரொலியால் ஐடியா, வோடபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் அனைத்து சேவைகளையும் வழங்கியது. மேலும் முண்ணனி நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 1 ஜிபி இண்டர்நெட் சேவையை 36 ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்தது.
பிஎஸ்என்எல் நிறுவனம் 8 ஜிபி இண்டர்நெட் சேவையினை 291 ரூபாய்க்கும், 2 ஜிபி இண்டர்நெட் சேவையினை 78 ரூபாய்க்கும் வழங்குவதாக அதிரடி அறிவிப்பை வழங்கியது.

Share this story