Tamil Wealth

ஆகஸ்ட் 26 ஆம் தேதி தைவானில் அறிமுகமாகவுள்ள ஆசஸ் ஜென்ஃபோன் 7!

ஆகஸ்ட் 26 ஆம் தேதி தைவானில் அறிமுகமாகவுள்ள ஆசஸ் ஜென்ஃபோன் 7!

ஆசஸ் நிறுவனம் அதன் ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 26 ஆம் தேதி தைவான் நாட்டில் அறிமுகம் செய்யவுள்ளது.

தைவானில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நேரடியாக வெளியீட்டு விழாவானது நடைபெறாமல் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளதாக டீசரில் கூறப்பட்டுள்ளது. நேற்று வெளியான டீசரில்  ஆசஸ் ஜென்ஃபோன் 7 குறித்து கசிந்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

டிஸ்பிளே: ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் டிஸ்பிளேவைனைக் கொண்டுள்ளது.

மெமரி: மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை உள்சேமிப்பினைக் கொண்டுள்ளது.

சிப்செட்: ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

பேட்டரி: ஆசஸ் ஜென்ஃபோன் 7 பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது. மேலும் 4,115 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

இணைப்பு ஆதரவு: இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ஆசஸ் ஜென்ஃபோன் 7 ஸ்மார்ட்போன் வைஃபை 6, ப்ளூடூத் வி 5 மற்றும் என்எப்சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Share this story