ஆப்பிள் போனின் விற்பனை குறைந்ததால் சிஇஓக்கு 10 கோடி சம்பளம் குறைப்பு

சாதாரண மனிதருக்கு கூட ஒரு முறையாவது ஆப்பிள் போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தொலை பேசி நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதலிடம் பெற்று இருந்தது.
ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்த போனின் விற்பனை அதிகரித்து வந்தது.
விற்பனை குறைந்தது:-
2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விற்பனையை விட 2016 ஆம் ஆண்டில் விற்பனை குறைவாகி உள்ளது. 2016 ஆம் ஆண்டில் 14 லடசம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் 2015- ல் 13 லட்சம் கோடி அளவை மட்டுமே எட்டியது. ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் 0.5 சதவீதம் குறைந்துள்ளது.
இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக்கிற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் குறைப்பதாக அறிவித்து உள்ளது.
அவருடைய ஆண்டு சம்பளம் 70 கோடி ரூபாய் ஆனால் இப்போது இந்த பிரச்சனைக்கு பிறகு 10 கோடி ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டு 60 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது.