மீண்டும் வரலாறு படைக்க வரும் அம்பாசிடர் கார்!

மீண்டும் வருகிறது அம்பாசிடர்:-
கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன் சொகுசு கார்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் பெரிய வரலாறு படைத்த நிறுவனம் தான் ஹிந்துஸ்தான். 1954 ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் நிறுவனம் அறிமுகம் செய்த லேண்ட்மாஸ்டர் என்ற பெயரில் வந்த காரே 4 ஆண்டுக்கு பிறகு அம்பாசிடர் என மாற்றம் பெற்று சந்தைக்கு வந்தது.
1960 -களில் இருந்து அம்பாசிடர் ஏம்கே 1, 2, 3, 4 என வெளிவந்தது. கடைசியாக அம்பாசிடர் கிராண்டி, கிளாசிக், என்கோர் 1999ல் இருந்து 2014 வரை விற்பனைக்கு வந்தது. இந்த காரானது பெரும்பாலான கும்பங்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் போன்றோரிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
2014 இல் பண்ணாட்டு நிறுவனங்களின் வடிவம், வசதிகள் போன்றவற்றால் சந்தையில் பெரும் வீழ்ச்சி அடைந்து வெளியடைந்தது. என்ன தான் பன்னாட்டு நிறுவனங்களின் கார்கள் வந்தாலும் அம்பாசிடரின் சொகுசு பயணத்தை இன்று வரையிலும் தரமுடியவில்லை என்பது தான் உண்மை. விபத்து ஏற்பட்டாலும் இந்த காரில் முன்னாடியும் பின்னாடியும் உள்ள அதிக இடத்தால் உள்ளே பயணம் செய்வோருக்கு குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்தும்.
ஹிந்துஸ்தான் நிறுவனத்திடம் ரூபாய் 80 கோடி செலுத்தி பீஜோ நிறுவனம் பாட்னர்ஷிப்பை பெற்றுள்ளது. என்ஜின் மற்றும் வடிவத்தில் மாற்றம் செய்யப்பட்டு முதல் மாடலாக பீஜோ அம்பாசிடர் என வெளிவர இருக்கிறது. இதன் விலை 6 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கலாம் என்றும் அடுத்த ஒரிரு ஆண்டுகளில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.