Tamil Wealth

ஆஸ்திரேலியா மற்றும் கனடாவைத் தொடர்ந்து இந்தியாவில் கால் பதிக்கவுள்ள அமேசான் பார்மசி!

ஆஸ்திரேலியா மற்றும் கனடாவைத் தொடர்ந்து இந்தியாவில் கால் பதிக்கவுள்ள அமேசான் பார்மசி!

அமேசான் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ், மளிகைப் பொருட்கள், ஆடை விற்பனை, ஆபரணங்கள், மொபைல் விற்பனை, என ஆன்லைன் விற்பனையில் அமேசான் முதல் இடத்தில் வருகின்றது. அந்த வகையில் ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசான் புதிய சேவையாக மருத்துவ சேவையினை துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது, வெளியே சென்று பொருட்களை வாங்க முடியாத பலரும் ஆன்லைன் மூலமே பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ள அமேசான், மருந்து விற்பனையில் கால் பதித்து அதன் பயனர்களை குஷியில் ஆழ்த்தவுள்ளது.

அமேசானின் இந்த ஆன்லைன் மருந்து விற்பனை சேவையானது முதலில் கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் இந்த விற்பனையில் நோய் சம்பந்தமான அடிப்படை மருந்துகள் மட்டுமே சுகாதார நலத்தின் அனுமதியுடன் விற்பனை செய்யப்படும்.

மேலும் பெரிய அளவில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாத பாரம்பரிய மருந்துகள் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவின் சோதனைக் கட்டம் முடிந்த பின்னர் இந்தியாவிலும் மருந்தக விற்பனை அறிமுகமாகவுள்ளது. மேலும் பெங்களூருவில் இது துவங்கும் என்றும் தெரிகிறது.

அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் முக்கிய நகரங்களில் 10 புதிய கிடங்குகள் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share this story