Tamil Wealth

ஏரோமொபில் 3.0 : பறக்கும் கார்

ஏரோமொபில்  3.0 : பறக்கும் கார்

ஏரோமொபில் 3.0 என்ற பறக்கும் காரை ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் மினி ஹெலிகாப்டர் போன்று செயல்படுவதுடன் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சாலையில் பயணிக்கும் இந்த கார் ஒரு சுவிட்சை தட்டினால் போதும் இறக்கைகள் போன்ற அமைப்பை கொண்ட காராக மாறி பறக்க தொடங்கிவிடும்.

மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டுள்ள இந்த கார் எளிதாக தரையிறக்கவும், பரப்பிலிருந்து எளிதாக வானில் பறக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் விமானம் போல் செயல்படாமல் மினி ஹெலிகாப்டரைப் போல் இயங்க கூடியது. அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ள இந்த காரின் விலை 1.5 கோடி முதல் ஆரம்பமாகிறது. மேலும் அடுத்த ஆண்டு முதல் முன்பதிவை தொடங்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பங்காளை கொண்டுள்ள இந்த கார் 2018 ஆம் ஆண்டு சந்தைக்கு வர உள்ளது.

Share this story