Tamil Wealth

கொல்கத்தாவில் சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து

கொல்கத்தாவில் சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து

கொல்கத்தாவில் சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து:-

நாட்டில் இப்போது எங்கு பார்த்தாலும் சுற்றுச்சூழல் மாசடைந்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை தான். அதற்காகவே சில திட்டம் வியூகித்து சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்தை இந்தியாவிலே முதல் முறையாக கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

கொல்கத்தாவின் முக்கியமான 12 மாநகரில் 12 பேருந்துகள் வேறு வேறு வழித்தடங்களில் இயக்கப்பட இருக்கிறது. முதல் பேருந்து உல்ட்டாதங்கா – கரியா இடையே 17 கிமீ செல்லும் என அறிவிப்பு வந்துள்ளது.

மார்ச் மாதத்திலிருந்து இயங்கும் என தகவல் கிடைத்துள்ளது. இந்த பேருந்தின் சில நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

  • சுற்றுச்சூழலுக்கு எந்த வித திங்கும் விளைவிக்காது
  • எரிபொருள் சிக்கனத்தை ஏற்படுத்தும். ஒரு கிலோ எரிவாயு மூலம் 20 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யலாம்.
  • ஒரு கிலோ எரிபொருளின் விலை ரூ30 மட்டுமே. இதனால் பேருந்து கட்டணமும் குறைவாகவே இருக்கும்.

இந்த திட்டம் முதலில் அதிக காற்று மாசடைந்த பகுதியான டெல்லியில் தான் வர இருந்தது. பின்னர் அங்கு மின்சார பேருந்து இயக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதால் அங்கு கைவிடப்பட்டது.

Share this story