4ஜி மொபைல் வெறும் 2800 ரூபாய் மட்டுமே
Jan 6, 2017, 01:51 IST

பேசிக் மாடல் மொபைல் போன் வைத்திருப்பவர்கள் இது வரைக்கும் வருத்தப்பட்டார்களோ இல்லையோ ஜியோ சிம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நிச்சயம் வருத்தப்படுவார்கள். அவர்களுக்காகவே ஸ்வைப் நிறுவனம் பட்ஜெட் விலையில் 4ஜி மொபைல் போனை விற்பனைக்கு ஷாப் க்ளூஸ் வெப்சைட்டில் கொண்டு வந்துள்ளது. அதன் சில சிறப்பம்சங்களை பார்க்கலாம்.
போனின் சிறப்பு அம்சங்கள்:
- 4ஜி நெட் வசதி
- இரண்டு சிம் கார்டு செருகும் வசதி
- ஆண்ட்ராய்டு வெர்ஷன் – 6.0
- 4 – இன்ச் டிஸ்பிளே
- 512 – எம்பி ரேம்
- 5 ஜிகா ஹெட்ஸ் குவார்ட் கோர் பிராசசர்
- 32 – ஜிபி நினைவக கார்டு செருகும் வசதி
- 5 மெகா பிக்செல் பின்புற கேமரா
- 3 மெகா பிக்செல் முன்புற செல்பி கேமரா
- எல்இடி ப்ளாஸ்
- 2000 எம்ஏஎச் பேட்டரி வலிமை
- வைஃபை, ஜிபிஎஸ், வசதி
- 119 கிராம் எடை கொண்டது
அனைத்து வண்ணங்களிலும் வர இருக்கிறது என்றாலும் தற்போது கருப்பு நிற போன் மட்டுமே முதலில் வருகிறது.