நவராத்திரி : நவ படிகள்

நவராத்திரி  :  நவ படிகள்

துர்க்கை அம்மன் மகிஷன் என்ற அரசனுடன் போரிட்ட ஒன்பது இரவுகள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளான விஜயதசமியில் துர்க்கை மகிஷன் அரசனை வதம் செய்கிறாள். இதனை நினைவு கூறும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நவராத்திரி விழாவில் கொலு அமைத்து அதாவது ஒன்பது படிகள் அமைத்து அதில் ஒவ்வொரு படியிலும் கிருஷ்ணர், பெருமாள், லட்சுமி, சரஸ்வதி, சக்தி, தசா அவதாரங்கள், விலங்குகள், பாண்டுரங்கன், மதுரா கிருஷ்ணன், பறவைகள் போன்ற பொம்மைகளை வைத்து வனங்க வேண்டும்.

முதல் படியில் ஒரறிவு கொண்ட தாவரங்களின் பொம்மைகளை வரிசைப்படுத்தி வைக்க வேண்டும். இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட உயிரினங்களின் பொம்மைகளை வரிசைப்படுத்தி வைக்க வேண்டும். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கறையான் போன்ற உயிரினங்களின் பொம்மைகளையும் நான்காவது படியில் நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு போன்ற உயிரினங்களின் பொம்மைகளையும் ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட மிருகங்கள், பறவைகள் போன்ற உயிரினங்களின் பொம்மைகளையும் ஆறாவது படியில் மனிதர்களின் பொம்மைகளையும், ஏழாவது படியில் ரிஷிகள், சித்தர்கள் போன்றோர்களின் பொம்மைகளையும், எட்டாவது படியில் நவக்கிரக அதிபதிகள், தேவர்கள் போன்ற தெய்வங்களையும் ஒன்பதாவது படியில் விஷ்னு, சிவன் முப்பெரும் தேவிகளின் பொம்மைகளையும் வைத்து வணங்க வேண்டும்.

Share this story